Homeசெய்திகள்சினிமாகார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் பாலிவுட் நடிகை!

கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் பாலிவுட் நடிகை!

-

நடிகர் கார்த்தி, ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு மெய்யழகன், கார்த்தி 26 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விரைவில் ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக கார்த்தி பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதில் கார்த்தி நடிக்க இருக்கும் சர்தார் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் பாலிவுட் நடிகை!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் தான் சர்தார். நடிகர் கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் கார்த்திவுடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல் பின்னணியில் ஸ்பை ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து சர்தார் 2 திரைப்படத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் பாலிவுட் நடிகை!அதன்படி இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சர்தார் 2 திரைப்படமானது போதைப் பொருளுக்கு எதிரான படமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தயாராக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன. அதை தொடர்ந்து படப்பிடிப்பு 2024 ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என்றும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் பாலிவுட் நடிகை!கார்த்தியின் கெரியரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜான், ஐதராபாத், கஜகஸ்தா, சென்னை போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ