Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனுக்கு ஜோடியாகும் அஜித் பட இந்தி நடிகை!

கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் அஜித் பட இந்தி நடிகை!

-

பாலிவுட் நடிகை வித்யா பாலன் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.

இந்திய சினிமா தற்போது வரை கொண்டாடி வரும் ‘நாயகன்’ என்ற பெரும் காவியத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக வித்யா பாலன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வித்யா பாலன் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸில் மும்மரமாக இருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் அவர் கமல் உடனான படத்தைத் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ