Homeசெய்திகள்சினிமாஅவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்....அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!

அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்….அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!

-

அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்....அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னையை புரட்டிப் போட்டது. புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை வாழ் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உணவுகள் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தனர். தற்போது வரை அவர்களை மீட்பு படை குழுவினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை மீட்புப்படையினர் போட் மூலம் அவர்களை பத்திரமாக மீட்டு வந்தனர். அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்....அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!அதைத்தொடர்ந்து நடிகர் அஜித், விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது மட்டுமல்லாமல் கார் கொடுத்து, அவர்கள் பத்திரமான இடத்திற்கு செல்ல உதவி செய்திருக்கிறார். அதே சமயம் அஜித் நடிகர்களுக்காக மட்டும் ஓடிவந்து உதவி செய்தது சரியா? என நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல துணை நடிகரான போஸ் வெங்கட் தனது சமூக வலைதள பக்கத்தில்,அஜித், அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு…. வடநாட்டவரையும் காக்கும்….. ஆனால் உங்களை விரும்பும், டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்களுக்கும் ஒரு போட் அனுப்பி இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

பல மக்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக, தாங்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும் யாரேனும் வந்து காப்பாற்றுங்கள் எனவும் தற்போது வரையிலும் உதவி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ