மிக்ஜம் புயல் எதிர்பாராத அளவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னைவாசிகளை படாத பாடு படுத்திவிட்டது இந்த புயலும் பெருமழையும். பொதுமக்கள் பலர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தால் பல சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நமிதா, விஷால், இயக்குனர் தங்கர் பச்சான் போன்றோர் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரும் வெள்ளத்தில் சிக்கி பின்னர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.நட்பு ரீதியாக நடிகர் அஜித் அவர்கள் இருவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது. இந்நிலையில் நடிகர் அஜித்தை பிரபல நடிகர் போஸ் வெங்கட் ஆதங்கத்துடன் விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அப்பதிவில் “வட இந்தியாவைச் சேர்ந்த நண்பரை மீட்பதற்காக படகை அனுப்பிய நீங்கள், டிக்கெட் எடுத்து உங்கள் படத்தை பார்க்கும் ஏழை ரசிகனுக்கும் ஒரு படகை அனுப்பி இருக்கலாமே!” என்று பதிவிட்டு இருந்தார்.
Hope you get the message Sir @DirectorBose . #liveandletlive #dowhatyoubelieveisright https://t.co/0ZutWrbJTu pic.twitter.com/T8rP9QE1Sa
— John Kokken (@highonkokken) December 7, 2023
அஜித்தின் தனிப்பட்ட நட்பு ரீதியான சந்திப்பை இப்படியா விமர்சிப்பது என்று ரசிகர்கள் போஸ் வெங்கட்டுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த ஜான் கோக்கன் அஜித்திற்கு தன் ஆதரவை தெரிவிக்கும்படி எக்ஸ் தளத்தில் கார்ட்டூன் படம் ஒன்றை பதிவிட்டு போஸ் வெங்கட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார். “நாம் என்ன செய்தாலும் அதை யாரோ ஒருவர் குறை கூறிக் கொண்டுதான் இருப்பர்” என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருந்தது அந்த கார்ட்டூன். மேலும் போஸ் வெங்கட்டையும் நேரடியாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.