Homeசெய்திகள்சினிமா'பாட்டல் ராதா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பாட்டல் ராதா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பாட்டல் ராதா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.'பாட்டல் ராதா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் குரு சோமசுந்தரம் ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குரு சோமசுந்தரம். அதே சமயம் இவர், பாட்டல் ராதா எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், மாறன், பாரி இளவழகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 'பாட்டல் ராதா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்க பா. ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். ரூபேஷ் ஷாஜி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ