Homeசெய்திகள்சினிமாபா ரஞ்சித் தயாரிக்கும் பாட்டல் ராதா... வெளியானது முதல் தோற்றம்...

பா ரஞ்சித் தயாரிக்கும் பாட்டல் ராதா… வெளியானது முதல் தோற்றம்…

-

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் பாட்டல் ராதா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதைத் தொடர்ந்து காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்

தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நீலம் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் பாட்டல் ராதா. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நட்ராஜன், ஜான் விஜய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்குகிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது.

MUST READ