Homeசெய்திகள்சினிமாமலையாளத்தில் வெற்றி... தமிழுக்கு வரும் பிரம்மயுகம்...

மலையாளத்தில் வெற்றி… தமிழுக்கு வரும் பிரம்மயுகம்…

-

- Advertisement -
மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் பிரம்மயுகம் திரைப்படம், நாளை மறுநாள் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மலையாளத்தில் கொடி கட்டி பறக்கும் நடிகர் மம்மூட்டி. அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் காதல் தி கோர். ஜோதிகா இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் மம்மூட்டி நடித்திருந்த காதல் தி கோர் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம்.

இப்படத்தில் முதியவர் வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற ராகுல் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் நாளை மறுநாள் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ