மம்மூட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மயுகம் திரைப்படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மோலிவுட் எனும் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள், பல தரப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வௌியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டு பூதகாலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இயக்கியவர் ராகுல் சதாசிவம். இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்த ராகுல், அடுத்ததாக மம்மூட்டியை வைத்து இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் தான் பிரம்மயுகம்.
மம்மூட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மம்மூட்டி இப்படத்தில் நடித்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் டீசரும் வெளியானது. மேலும், இத்திரைப்படம் முழுக்க முழுக்க கருப்பு, வெள்ளையில் மட்டுமே வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி படம் திரையரங்குகளுக்கு வருகிறது. இந்நிலையில், நாளை அபுதாபியில் பிரம்மயுகம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.