- Advertisement -
விஜய்யின் தந்தையை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகரும் இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை (urine bladder surgery) செய்து கொண்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திடீர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அந்த நேரங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாய்ஸ் நோட்-ஆக பேசி அதனை வெளியிட்டு மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சமீபத்தில் வீடு திரும்பியவரை முன்னணி நடிகரும், எஸ்.ஏ.சி.யின் மகனுமான விஜய், செப்.13-ல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தந்தை, தாய், மகன் என மூன்று பேரும் இணைந்து குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக் கொள்வதில்லை என பரவி வந்த நிலையில், நேரில் சென்று தந்தையின் நலம் விசாரித்தது பரவலாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சென்று நலம் விசாரித்தார். புஸ்ஸி ஆனந்தால் தான் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் நலம் விசாரித்துள்ளார்.
https://twitter.com/Dir_SAC/status/1702631785577005258
இந்நிலையில் ஒன்றாக சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து “பிள்ளைகள் ஒன்று சேரும் போது
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது” என விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.