விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கர்நாடக அமைப்பினர் சிலர் நடிகர் சித்தார்த்தை சித்தா பட புரமோஷன் நடைபெறும் இடத்திலிருந்து அவரை அவமதித்து வெளியேற்றினர். அதேசமயம் அந்த கர்நாடக அமைப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘லியோ படத்தை நான் கர்நாடகாவில் வெளியிடப் போவதில்லை’ என்று விஜய் பேசிய போலியான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ‘இந்த ஆடியோ போலியானது. இவ்வாறான ஆடியோவை வெளியிடுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.