கருப்பை கோளாறுகளை சரி செய்ய உதவும் பட்டாம்பூச்சி ஆசனம்!
இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகிறது. அதில் ஒன்றுதான் மாதவிடாய் பிரச்சனை. நூற்றில் 70 பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் இளம் வயதிலேயே உண்டாகிறது. இதற்கு முதலில் சரியான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதேசமயம் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது அவசியம். அத்துடன் பட்டாம்பூச்சி ஆசனம் செய்வது கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை சரி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
பட்டாம்பூச்சி ஆசனம் செய்ய பட்டாம்பூச்சி அவர்களின் இறக்கைகளைப் போல முதலில் தரையில் உங்கள் உள்ளங்கால்களை இணைத்த படி அமர வேண்டும். அதாவது கால்களின் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் நேராக இருக்க வேண்டும். அதே சமயம் பாதங்களின் மீது கைகளைக் குறித்து இருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதே தோரணையில் இருந்து கால்களை அசைக்க வேண்டும். அத்துடன் மூச்சை உள்ளெழுத்து மெதுவாக சுவாசிக்க வேண்டும். (குறிப்பு: முதுகெலும்பு நேரான நிலையில் இருக்க வேண்டும்) தினமும் இவ்வாறு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்யலாம். இதனால் அடிவயிற்றில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் கருப்பையின் செயல்பாடு மேம்படும். அத்துடன் இது சோர்வை நோக்கி சுறுசுறுப்பை தரும். மேலும் இந்த ஆசனம் மன அழுத்தத்தை போக்கவும் உடல் வலிகளை குறைக்கவும் உதவும்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.