‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட லியோவில் புதிய கதாபாத்திரம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் களம் களமிறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சில வாரங்களாக காஷ்மீரில் டென்ட் அடித்திருந்த படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி உள்ளனர். இங்கு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தற்போது லியோ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ‘ரோலக்ஸ்‘ கதாபாத்திரம் மெகா ஹிட் ஆனது. அந்த 2 நிமிட கதாபாத்திரத்திற்கே சூர்யாவின் மார்க்கேட் எங்கேயோ எகிறியது. இந்திய சினிமாவின் அதிகம் வரவேற்பு பெற்ற கதாபாத்திரமாக ரோலக்ஸ் மாறியுள்ளது.
இந்நிலையில் ‘லியோ’ படத்திலும் அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை லோகேஷ் களமிறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக முக்கியத்துவத்துடன் இந்தக் கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக தனுஷ் 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லோகியின் அடுத்த சம்பவம் ஸ்டார்ட்🔥🔥🔥