Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆர், இப்போ ராம் சரண்... தெலுங்கில் வாய்ப்புகளை அள்ளும் வாரிசு நடிகை!

ஜூனியர் என்டிஆர், இப்போ ராம் சரண்… தெலுங்கில் வாய்ப்புகளை அள்ளும் வாரிசு நடிகை!

-

புதிய தெலுங்கு படத்தில் நடிகை ஜான்வி கபூர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் படிப்படியாக உயர்ந்து வருகிறார்.

தென்னிந்திய படங்களில் நடிக்க அவர் அதிக ஆர்வமாக இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

ஜூனியர் என்டிஆரின் 30-வது படத்தில் ஜான்வி கதாநாயகியாக நடிப்பதாக படக்குழுவினர் பிஸோட்ர் வெளியிட்டனர்.

இந்நிலையில் ராம் சரண் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் ஜான்விகபூர் கதாநாயகியாகா இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவர் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறாராம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகத்திற்கு திரும்புவது குறிப்பிடத்தக்கது.

MUST READ