சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணி புதிய படத்திற்காக இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முதல் முறையாக சினிமாடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கி இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களையே உருவாகியுள்ளது. அவரது படங்கள் இதுவரை இல்லாத அளவில் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன.
இவரது இயக்கத்தில் நடிக்க டோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகர்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தை இயக்கயிருப்பதாகவும் அதற்காக ரஜினி கதை கேட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி நடந்தால் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகள் அனைத்தும் முறியடிக்கப்படும் என்பது நிச்சயம்!