பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் தற்போது விஷால் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ் அதையடுத்து நல்ல வரவேற்பைப் பெற்ற பல படங்களைக் கொடுத்தார். கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியிருந்தார்.
பாண்டிராஜ் விஷால் நடிப்பில் ‘கதகளி’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் பாண்டிராஜ் மற்றும் விஷால் கூட்டணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்திற்கு இணைகின்றனராம்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றனராம். ஏற்கனவே விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ ஆகிய படங்களையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.