Homeசெய்திகள்சினிமாமிஷ்கின் உடன் விஜய் சேதுபதி... மீண்டும் கைகோர்க்கும் 'பிசாசு 2' கூட்டணி!

மிஷ்கின் உடன் விஜய் சேதுபதி… மீண்டும் கைகோர்க்கும் ‘பிசாசு 2’ கூட்டணி!

-

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இயக்குனராக மக்களைக் கவர்ந்த அவர் தற்போது நடிகனாக வலம் வர தயாராகியுள்ளார்.

Pisasu 2
Pisasu 2

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ படத்திலும், விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியின் ‘லியோ’ படத்திலும் மிஷ்கின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தார் மிஷ்கின்.

myssin-and-vjs.jpg
myssin-and-vjs

தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளனராம். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறாராம். இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ