Homeசெய்திகள்சினிமாஅம்பேத்கரை தவிர்த்துவிட்டு, இந்தியாவை கட்டியெழுப்ப முடியுமா? இயக்குனா் - பா.ரஞ்சித் கேள்வி

அம்பேத்கரை தவிர்த்துவிட்டு, இந்தியாவை கட்டியெழுப்ப முடியுமா? இயக்குனா் – பா.ரஞ்சித் கேள்வி

-

- Advertisement -

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை புறக்கணித்து, இந்தியாவை கட்டியெழுப்ப முடியாது என்பதை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உணர்ந்திருப்பார் என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

அம்பேத்கரை புறக்கணித்து, இந்தியாவை கட்டியெழுப்ப முடியாது - பா.ரஞ்சித்

‘வானேறும் விழுதுகள்’ என்கின்ற பெயரில் புகைப்பட கண்காட்சியானது சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. இதுவரையில் பெங்களூரில் மட்டும் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி, முதன் முதலாக சென்னையில் நடத்தப்பட்டது. தமிழ் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் தொடங்கி வைத்த இக்கண்காட்சியில்,  பலதரப்பட்ட பயணங்கள் தொடர்பான புகைப்படங்களை உருவாக்கிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா ரஞ்சித், இதுபோன்ற புகைப்பட கண்காட்சிகள் பெருமளவில் வெளி மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் முதன்முதலாக சென்னையில் நடைபெறுவது, சுவாரஸ்யமானது என்றார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை புறக்கணித்துவிட்டு இந்தியாவை கட்டியெழுப்ப முடியாது என அமித் ஷா போன்றவர்கள் தற்போது தெரிந்துகொண்டிருப்பார்கள்என்று கேள்வி ஒன்றேக்கு அவர் பதிலளித்தார்.

அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது என்று பேசிய ரஞ்சித், அம்பேத்கரை புறக்கணித்துவிட்டு இந்தியாவை கட்டியெழுப்ப முடியாது என்பதை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தற்போது உணர்ந்திருப்பார் என கூறினார்.

அம்பேத்கர் பற்றி தவறாக விமர்சித்தால் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்பதை தெரிந்த்திருப்பார். மாடர்ன் இந்தியாவில், அம்பேத்கர் கொள்கைகளைக் கொண்டு நம் சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய நாம் முயற்சிக்க வேண்டும் என இயக்குனர் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

MUST READ