Homeசெய்திகள்சினிமாவிக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?.... சூடுபிடிக்கும் விவாதம்!

விக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?…. சூடுபிடிக்கும் விவாதம்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். விக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?.... சூடுபிடிக்கும் விவாதம்!ஆனால் இவர்களில் சூர்யா மற்றும் விக்ரம் செய்வதை அஜித்- விஜயால் செய்ய முடியாது என்று பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் விக்ரம் சினிமா மீது கொண்ட அதீத காதலால் தனது உடலை மெழுகாய் உருக்கி அதற்கேற்றார் போல் தனது கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொள்வார். அந்த வகையில் சேது, காசி, பிதாமகன், ஐ, தங்கலான் போன்ற படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். விக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?.... சூடுபிடிக்கும் விவாதம்!அதேபோல் நடிகர் சூர்யாவும், பேரழகன் படத்தில் உடலில் மாற்றம் உள்ளவராக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். கங்குவா படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ரமும், சூர்யாவும் இது போன்ற கெட்டப்புகளில் சாதாரணமாக நடித்து விடுகிறார்கள். ஆனால் அஜித் –விஜய் இதுபோன்று நடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் ஹீரோயிசம் தொடர்பான கதைக்களங்களை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இருப்பினும் அஜித் வரலாறு, வில்லன் ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜயும் பிகில், லியோ ஆகிய படங்களில் தனது கெட்டப்பில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்திருந்தார். ஆனால் அது விக்ரம் – சூர்யா அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.விக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?.... சூடுபிடிக்கும் விவாதம்!

விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். விஜயும், அஜித்தும் மாஸாக நடித்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் வில்லன்களிடம் அடி வாங்குவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. விடாமுயற்சியின் மூலம் அஜித் புதிய முயற்சியை கையில் எடுத்திருந்தாலும் அது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதனாலேயே அவர்கள் ஹீரோயிசம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் விஜய் மற்றும் அஜித் ஹீரோயிசத்தை தவிர்த்து விட்டு வேறு மாதிரியான தோற்றத்தில் நடிப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிலும் விஜய், ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார். எனவே அவர் மீண்டும் சினிமாவிற்கு வந்தால் மட்டுமே அவரிடமும் இதை எதிர்பார்க்க முடியும்.

MUST READ