Homeசெய்திகள்சினிமாராம்குமாரை நம்ப முடியவில்லை..... சிவாஜியின் அன்னை இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ராம்குமாரை நம்ப முடியவில்லை….. சிவாஜியின் அன்னை இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

-

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெகஜால கில்லாடி எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் 30% வட்டியுடன் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது.ராம்குமாரை நம்ப முடியவில்லை..... சிவாஜியின் அன்னை இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு! இந்த கடமை திரும்ப செலுத்தாத காரணத்தால் தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனம் துஷ்யத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடன் தொகையை வட்டியுடன் ரூ. 9.39 கோடியை திருப்பித் தருமாறு ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறும் துஷ்யந்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை அப்படத்தின் உரிமைகளை வழங்காத காரணத்தால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராம்குமாரை நம்ப முடியவில்லை..... சிவாஜியின் அன்னை இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!அதே சமயம் இந்த வழக்கில் அன்னை இல்லம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்றும், ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரி நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த வீட்டினை சிவாஜி கணேசன் பிரபுவிற்கு எழுதி வைத்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் அன்னை இல்லம் பிரபுவிற்கு சொந்தமானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரபுவின் அண்ணனும், துஷ்யந்தின் தந்தையுமான ராம்குமார் அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.ராம்குமாரை நம்ப முடியவில்லை..... சிவாஜியின் அன்னை இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், பல கோடி ரூபாய் மதிப்புடைய அன்னை இல்லத்தில் தனக்கு பங்கு இல்லை என ராம்குமார் கூறுவதை நம்ப முடியவில்லை என்றும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதாடினார். எனவே இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பிரபு தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

MUST READ