Homeசெய்திகள்சினிமாஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

ஏஐ மூலம் கேப்டன்…. எங்க வீட்டுப்பிள்ளை விஜய்….. பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல் நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தது இன்றுவரையிலும் தமிழ் ரசிகர்களை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!இந்நிலையில் தான் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் காண்பிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதன்படி பிரேமலதா விஜயகாந்திடம் அனுமதி பெறப்பட்டு விஜயகாந்தை மீண்டும் திரையில் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனை பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றில் உறுதி செய்து இருந்தார். அதாவது “கேப்டன் இருந்திருந்தால் இதற்கு நோ சொல்லியிருக்க மாட்டார். விஜய் எங்க வீட்டு பிள்ளை. அவர் மீது விஜயகாந்துக்கு மிகுந்த பாசம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

அதைத்தொடர்ந்து சமீபத்தில் கூட விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்.

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயின் சந்திப்பு அரசியல் கூட்டணிக்கு அச்சாரமாக கூட இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. எனவே இதற்கு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!அவர் கூறியதாவது, “கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் வருகின்ற இடம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என விஜய் என்னிடம் சொன்னார். அப்பொழுது சண்முக பாண்டியன் விஜயிடம் சினிமாவில் நீங்க தான் எனக்கு வழிகாட்டி என்று சொன்னார். அதற்கு விஜய், அரசியலில் பிரபாகரன் தான் எனக்கு சீனியர் என்றும் பத்திரிகையாளர்களை அவர் கையாளும் விதம் அருமையாக இருப்பதாகவும் சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன் விஜயகாந்தை கோட் படத்தில் பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவிக்க மட்டுமே விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் வீட்டிற்கு வந்தனர் என்று கூறியுள்ளார்.

MUST READ