Homeசெய்திகள்சினிமாநடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இவரது நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அதன்படி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது எந்தவித முன்னறிவிப்புமின்றி நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தததான் காரணமாக அங்கு திரண்ட ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜுன் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே வழக்கில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 105, 118(1), ரெட் வித் 3/5 பி.என்.எஸ் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!இதில் 105 பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு. 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிஎன்எஸ் 118(1) இன் கீழ் ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை ரத்து செய்யக்கோரியும் , திங்கட்கிழமை வரை கைது நடவடிக்கை வேண்டாம் என மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த அவசர மனுவை உயர்நீதிமன்றத்தில் மாலை 4.30 மணிக்கு நீதிபதி விசாரிக்கிறார். இந்நிலையில் சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இது தொடர்பான மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ