பிரபல இயக்குனர் பா ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் பிரபலமானவர். அதே சமயம் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தனது நீலம் ப்ரொடக்ஷன், நீலம் ஸ்டுடியோ ஆகிய நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார் பா ரஞ்சித். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கியயுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி பா ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும் நடிகர் ஆர்யா வில்லனாகவும் நடிக்க உள்ளனராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அடுத்ததாக இந்த படத்திற்கு வேட்டுவம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.