இன்று (ஜனவரி 20) இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் நெக்ஸ்ட் லெவல் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறாரா? என்பது போன்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதே சமயம் நடிகர் சந்தானம், ஆர்யா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை கஸ்தூரி என ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நெக்ஸ்ட் லெவல் என்று பதிவிட்டிருந்தனர். எனவே இதன் மூலம் இந்த அப்டேட்டானது டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் அப்டேட் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ் 2. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க சந்தானத்துடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, கஸ்தூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா ஆகியோர் நெஸ்ட் லெவல் என்று ட்வீட் போட்டிருப்பது டிடி ரிட்டன்ஸ் 2 படம் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என்றும் இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.