Homeசெய்திகள்சினிமாசென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ - சான்றிதழ்?

சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ – சான்றிதழ்?

-

- Advertisement -

சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்திற்கு U/A certificate கிடைத்துள்ளது.

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Censor Board 'Kannan nambathey' - Certificate?

2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே‘ திரைப்படம், சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

கண்ணை நம்பாதே

மேலும், திரை பிரபலங்கள் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘குருகுரு‘ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

kannai nambathey

இந்நிலையில், ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

MUST READ