Homeசெய்திகள்சினிமாஇது வேலைக்கு ஆகாது போலயே... கடைசி நேரத்தில் அதிரடி முடிவெடுத்த சந்திரமுகி 2 படக்குழுவினர்!

இது வேலைக்கு ஆகாது போலயே… கடைசி நேரத்தில் அதிரடி முடிவெடுத்த சந்திரமுகி 2 படக்குழுவினர்!

-

சந்திரமுகி 2 படத்தில் படக்குழுவினர் பெரிய மாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு  ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில்  17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.  படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் எம்எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கணா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியானது.பி வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 15ஆம் சந்திரமுகி 2 ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பணிகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது படத்தில் மற்றுமொரு மாற்றம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் இருக்குமாறு படம் வந்துள்ளது. படத்தை மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று அவ்வளவு நேரம் வைத்திருக்கிறார்கள். ஆனால் ரிலீசுக்கு முன்பு படத்தை பார்த்த பலரும் படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சற்று நீளத்தை குறைத்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் பலரும் ஒரே மாதிரியாக சொல்லியதால் படக்குழுவினரும் அதை ஒப்புக்கொண்டு படத்தை நேரத்தை சுமார் 20 நிமிடங்கள் குறைத்திருக்குகிறார்களாம். எனவே படத்தின் நீளம் தற்போது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் நேரத்தை குறைத்தது எடுபடுமா, இல்லையா என்பதை செப்டம்பர் 28ஆம் தேதி நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

MUST READ