சந்திரமுகி 2 படத்தின் கங்கனா ரணாவத் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்தை பி வாசு இயக்கி இருந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கியுள்ளார். இதில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The wait is over! ✨ The QUEEN 👑 who’s been ruling our hearts for years with her Boldness, Beauty & Character is back! 🤗🌟
Stay tuned as we reveal the 1st look of #KanganaRanaut 🌟 from #Chandramukhi2 🗝️ tomorrow at 11AM!#PVasu @KanganaTeam @offl_Lawrence @mmkeeravaani… pic.twitter.com/ltsWOTNYKs
— Lyca Productions (@LycaProductions) August 4, 2023
மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதாவது வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.