Homeசெய்திகள்சினிமாசென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்... களத்தில் இறங்கி மீட்பு...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்… களத்தில் இறங்கி மீட்பு…

-

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் அவரையும், பாலிவுட் நடிகர் அமீர் கானையும் படகு மூலம் பத்திரமாக மீட்டுச் சென்றனர்

சென்னையில் கோர தாண்டவம் ஆடிய மிக்‌ஷாம் புயலால், சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மாவட்டமே ஸ்தம்பித்து போனது. மொத்த மாவட்டமும் வெள்ளநீரில் மிதக்கத் தொடங்கியது. தரை தளம் முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. சென்னை முழுவதும் தீவு போல காட்சி அளிக்கும் நிலையில், பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு அள்ளல் படும் நிலைமைக்கு மக்கள் தவித்து வருகின்றனர்.
அதே சமயம் உணவு, தங்குமிடம், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு அழைக்குமாறு தொடர்ந்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வந்தனர். நேற்று முழுவதும் மழை விடாமல் பெய்து வந்தாலும், இன்று காலை முதல் சென்னையில் மழை குறைந்தது. எனவே தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணிகள் முடக்கிவிடப் பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை நடிகர் விஷ்ணு விஷால் தன் வீட்டில் மழைநீர் புகுந்ததாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, உடனடியாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர், உடனடியாக களத்தில் இறங்கி விஷ்ணு விஷால் மற்றும் அவரின் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். அதே சமயம், காரப்பாக்கம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நடிகர் அமீர் கானையும் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

MUST READ