Homeசெய்திகள்சினிமாசேரன் ,கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

சேரன் ,கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

சேரன் மற்றும் கிச்சா சுதீப் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சேரன் பாரதி கண்ணம்மா, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து சொல்ல மறந்த கதை எனும் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர். கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் என்னும் திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். இவ்வாறு மக்கள் கொண்டாடும் கிளாசிக் படங்கள் பலவற்றை இயக்குனர் சேரன் கொடுத்துள்ளார்.
தற்போது சில காலங்கள் படம் இயக்குவதில் இடைவெளி எடுத்துக் கொண்டார். ஆனாலும் கதாநாயகனாக பல படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.

இந்நிலையில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது குறித்த செய்திகள் 3 மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தது. தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கிச்சா சுதீப்பின் 47வது படமான இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சேரன் இயக்க இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இது ஹை பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ