வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றார். பிக் பாஸ் சீசன் 3யிலும் பங்கேற்றார் என்பது குடிபிடதக்கது. நல்ல கதையம்சமும் கருத்தும் உடைய படங்களை தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடித்து வருகிறார் சேரன். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சத்தமே இல்லாமல் சேரன் இயக்கியுள்ள ஜர்னி (Journey) வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனி லிவ் ஓடிடி தளத்திற்காக சேரன் இந்த வெப் சீரிசை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான படப்பிடிப்புகள் துபாயில் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸில் விவசாயம் தொடர்பான ஒரு எபிசோடு இடம்பெற்றுள்ளதாம். வன்முறையான ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகும் வெப் சீரிஸ்களை ஒப்பிடுகையில் ஒரு நல்ல சமூக கருத்தையும், மண் மணம் மாறாத கதையையும் இந்த வெப் சீரிஸின் மூலம் கையில் எடுத்துள்ளார் சேரன்.
இந்த வெப் சீரிஸ் நிச்சயமாக மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரில் ஆரி, பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த வெப் தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. சேரன் தற்போது தமிழ், கன்னட மொழியில் உருவாகும் கிச்சா சுதீப் நடிக்கின்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய நடிகரை வைத்து இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- Advertisement -