Homeசெய்திகள்சினிமாமலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சேரன்..... எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா?

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சேரன்….. எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா?

-

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். இவர் பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சேரன்..... எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா? அதன் பின்னர் இவர் ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் உருவெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதே சமயம் சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வெற்றி கண்டார். கடைசியாக சேரன், ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். அடுத்ததாக இவர் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதன்படி அனுராஜ் மனோகர் இயக்கும் நரிவேட்டா என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சேரனுடன் இணைந்து டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சேரன்..... எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா? இது குறித்து நடிகர் சேரன், “என்னுடைய ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு எனக்கும் மலையாள சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பந்தம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதை பார்க்க உற்சாகமாக உள்ளது. எல்லோரும் மற்ற மொழி படங்களில் பணிபுரிவது போல எனக்கும் மலையாள மொழி படங்களில் நடிக்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது. மேலும் டோவினோ தாமஸுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்ற சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MUST READ