Homeசெய்திகள்சினிமாரீ-ரிலீஸுக்கு தயாரான சேரனின் 'ஆட்டோகிராப்'..... ஏஐ ட்ரைலர் இணையத்தில் வைரல்!

ரீ-ரிலீஸுக்கு தயாரான சேரனின் ‘ஆட்டோகிராப்’….. ஏஐ ட்ரைலர் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.ரீ-ரிலீஸுக்கு தயாரான சேரனின் 'ஆட்டோகிராப்'..... ஏஐ ட்ரைலர் இணையத்தில் வைரல்!

கடந்த 2004 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான படம் தான் ஆட்டோகிராஃப். சேரனே இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சேரனுடன் இணைந்து மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான காதல் கதையில் வெளியான இந்த படம் அன்று முதல் இன்று வரை பலரின் பேவரைட் படங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதே சமயம் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து பல விருதுகளையும் வாரிக் குவித்தது இந்த ஆட்டோகிராஃப்.

இந்நிலையில் இப்படம் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆட்டோகிராஃப் படத்தின் ஏஐ ட்ரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பார்த்திபன், சினேகா, பிரசன்னா, சசிகுமார், சமுத்திரக்கனி, பா. ரஞ்சித் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இந்த ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

MUST READ