சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த்தின் எட்டாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். குழந்தை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கமல்ஹாசன் உட்பட பலரும் சித்தா பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சித்தா திரைப்படம் நவம்பர் 17-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 28-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.