Homeசெய்திகள்சினிமாரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்.... ஹேப்பி பர்த்டே சியான்!

ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்…. ஹேப்பி பர்த்டே சியான்!

-

- Advertisement -

சியான் விக்ரமின் 59ஆவது பிறந்தநாள் இன்று.ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்.... ஹேப்பி பர்த்டே சியான்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரை சியான் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். திரைத்துறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதுபோல நடிகர் விக்ரமை அசத்தல் மன்னன், அசாத்திய கலைஞன் என்று சொல்லலாம். ஏனென்றால் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி முழு அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர். சினிமா மீது கொண்ட அதீத காதலினால் கடினமாக உழைத்து தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்.... ஹேப்பி பர்த்டே சியான்!சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ, தங்கலான் என வித்தியாசமான கதாபாத்திரங்களை பல்வேறு பரிமாணங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். எப்படிடா இல்ல மனுஷன் இப்படி நடிக்கிறார்? என்று பலரும் வாயை பிளக்கும் அளவிற்கு தனது நுட்பமான நடிப்பை கொடுத்து மேஜிக்கை நிகழ்த்துவார். அதாவது சினிமாவில் நடிப்பதற்காக தன்னுடைய உடல், குரல் மட்டுமில்லாமல் மனதையே மாற்றம் அளவிற்கு திறமை உடையவர். தான் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ அதே கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார் சியான். அந்த வகையில் சினிமாவில் இவர் ஒரு ஹீரோவாக இருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு லெஜண்ட். ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்.... ஹேப்பி பர்த்டே சியான்!இவ்வாறு இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக கோலாச்சி செய்து வருகிறார். இந்நிலையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்றைய நாளை (ஏப்ரல் 17) ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். விக்ரமுக்கு, ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ