கடந்த 2023 ஆம் ஆண்டில் பல சினிமா பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. இந்த 2024 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவை அவர்கள் திருமண வாழ்வில் முதல் பொங்கலான “தல பொங்கல்” நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர். திருமண வாழ்வின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் சினிமா பிரபலங்களின் லிஸ்ட் இதோ.
அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
கவின்-மோனிகா டேவிட்
அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள நடிகர் கவினுக்கும், அவருடைய காதலியான மோனிகா டேவிட்டுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா
வெள்ளித்திரை நகைச்சுவை நடிகராக நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி–ம், சின்னத்திரை நடிகையான சங்கீதாவும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். முக்கியமான உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள சிம்பிளாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
கார்த்திகா நாயர்- ரோஹித் மேனன்
பிரபல நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயருக்கும், தொழிலதிபர் ரோஹித் மேனன் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கார்த்திகா நாயர் “கோ” படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சில தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இவர்களை தவிர பல சின்னத்திரை நட்சத்திரங்களும் தங்களுடைய தல பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் “பொங்கலோ பொங்கல்… இனிய தல பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என மன நிறைவோடு வாழ்த்துகிறோம்.