தென்னிந்தியாவை கலக்கும் கூட்டணி… அனிருத் அறிவிப்பு…
- Advertisement -

கோலிவுட்டின் ராக்ஸ்டாராக கொண்டாடப்படும் இசை அமைப்பாளர் அனிருத். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் விருதை பெற்றுள்ளார். அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனிருத், தற்போது பல மொழிப் படங்களிலும் கவனம் காட்டி வருகிறார். அண்மையில், அட்லீ இயக்கத்தி்ல வெளியான ஜவான் படத்திற்கும் அனிருத் இசை அமைத்திருந்தார்.

இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திற்கும் அவர் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், தென்னிந்தியாவை கலக்கப்போகும் ஒரு பெரிய கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.