Homeசெய்திகள்சினிமாஅனிமல் படம் சமூகத்திற்கு நோய்.... காங்கிரஸ் எம்.பி. காட்டம்....

அனிமல் படம் சமூகத்திற்கு நோய்…. காங்கிரஸ் எம்.பி. காட்டம்….

-

- Advertisement -

அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்தீப் கெட்டி வங்கா. இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சந்தீப் ரெட்டி. இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி இந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இந்தியில் சந்தீப் ரெட்டியே இப்படத்தை இயக்கியிருந்தார்.

அண்மையில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இதில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். பான் இந்தியா ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனில் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் தந்தை – மகனாக நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தி டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. படம் வசூலில் கலக்கினாலும், எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கவே இதுபோன்ற திரைப்படங்கள் உதவும். இந்த படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு எப்படி அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பிய அவர், வன்முறை, அவமானம், அக்கிரமங்களை நியாப்படுத்தும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ