காமெடி நடிகராக இருந்து தற்போது நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகர் சதீஷ். சமீபத்தில் வெளிவந்த கான்ஜுரிங் கண்ணப்பன், ஹாரர் காமெடி படமாக டிசம்பர் 8- ஆம் தேதி வெளிவந்து தற்போது 3வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வின் ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. ரெஜினா கெசண்ட்ரா, ஆனந்தராஜ், சரண்யா, வி டிவி கணேஷ் போன்றோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.விமர்சன ரீதியிலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நடிகர் சதீஷ் உணர்ச்சிவசப்பட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.”கான் ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்து வெற்றிப் படமாக்கியவர்களுக்கு நன்றி. திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது படம் பார்க்காதவர்கள் பார்க்கவும்” என்றும் சதீஷ் கூறியுள்ளார். இது சம்பந்தமான வீடியோவை நடிகர் சதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#ConjuringKannappan Entered 3rd week successfully 🙏🏻😍🙏🏻
Do watch it with ur family and kids ❤️ pic.twitter.com/Sq6HLKEt8g— Sathish (@actorsathish) December 22, 2023
மேலும் நடிகர் சதீஷ் வித்தைக்காரன் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜன் உதவி இயக்குனர் வெங்கி இயக்குகிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.