நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்திருந்த மாயா போட்டியாளராக கலந்து கொண்டார். கமலுடன் இணைந்து நடித்ததால் மாயாவிற்கு கமல் சப்போர்ட் செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
Hope it doesn’t affect Pugazh’s cinema career… pic.twitter.com/bdJXtk94HF
— தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் கமல் மற்றும் மாயா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கமல் ரசிகர்களிடம் புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியை நானும் குரேஷியும் நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் அப்படி இருந்தது அதனால் தான் அப்படி பேசினோம் கமல் சார் ரசிகர்களை இது காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் நாட்களில் இது போல் எதையும் செய்ய மாட்டேன் இது இவ்வளவு சீரியசான விஷயமாக மாறும் என்று எனக்கு தெரியாது” என்று புகழ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மன்னிப்பு வீடியோ… மறப்போம் மன்னிப்போம்✌️
Credit: @Gymswathi https://t.co/s1GaYzC5hM pic.twitter.com/gAMI6bHPV8— தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024
அதே சமயம் குரேஷி, “நான் செய்தது பெரிய தவறு என்பதை உணர்கிறேன். யாரையும் புண்படுத்தாத வகையில் நான் காமெடி செய்வேன். இது என்னையும் மீறி நான் நடந்துவிட்ட.து இதற்கு பகிரங்கமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இவ்வாறு இருவரும் தனித்தனியே வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.