காதலியை மணம் முடிக்கும் பாலா… குவியும் வாழ்த்துகள்…
- Advertisement -
சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலா, தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் அறிமுகமாகி, தொடர்ந்து ரசிகர்களை தனது காமெடியால் கவர்ந்த நடிகர் கேபிஒய் பாலா. இதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பாலா மற்றும் புகழ் இருவருமே பிரபலம் அடைந்தனர். டைமிங் மற்றும் ரைமிங்கில் நகைச்சுவை செய்வதில் பாலாவுக்கு நிகர் பாலா மட்டும்தான். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா, வௌ்ளித்திரைக்கு வந்தும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவைத் தாண்டி நடிகர் பாலா, பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளும் செய்து வருகிறார். முதலில் ஈரோடு அருகே உள்ள மலைக்கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதை அறிந்த அவர், இலவசமாக அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். அடுத்து சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, பொதுமக்களுக்கு உதவினார். மேலும், அண்மையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனம் வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் பாலா, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, புதுச்சேரி பாலியல் வன்கொடுமை குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவர் யார் என்பது குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை. அதே சமயம், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.