விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பலருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா ஆகியோர் அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல ரசிகர்களை சேகரித்து வைத்துக் கொண்டனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேசமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இதில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாலாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் இவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு பாலாவுடனான காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொம்மை, குழந்தையின் ஷூ, பிரக்னன்சி கிட் போன்றவற்றை வைத்து விரைவில் என்று சூசகமாக தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ரித்திகாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.