Homeசெய்திகள்சினிமாஜூலையில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு.... வெளியான புதிய தகவல்!

ஜூலையில் தொடங்கும் ‘கூலி’ படப்பிடிப்பு…. வெளியான புதிய தகவல்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலையில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு.... வெளியான புதிய தகவல்!இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் இந்த படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நாகார்ஜுனா போன்ற சில நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஜூலையில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு.... வெளியான புதிய தகவல்! அதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஜூன் 10 அன்று தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனதாக தெரியவந்துள்ளது. அதன்படி கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ