Homeசெய்திகள்சினிமாஇந்த தேதியில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு...... 73 வயதிலும் அலப்பறை செய்யும் ரஜினி!

இந்த தேதியில் தொடங்கும் ‘கூலி’ படப்பிடிப்பு…… 73 வயதிலும் அலப்பறை செய்யும் ரஜினி!

-

- Advertisement -

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தேதியில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு...... 73 வயதிலும் அலப்பறை செய்யும் ரஜினி!இந்த படத்தை 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பானது திருவனந்தபுரம், சென்னை, நாகர்கோயில், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் ரஜினி தனது போர்ஷனை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. ஆகவே நடிகர் ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். அதன்படி இன்னும் மூன்று வாரத்திற்குள் ரஜினி கூலி படத்தில் நடிக்க தொடங்குவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து மாஸ் காட்டி வருகிறார் ரஜினி.இந்த தேதியில் தொடங்கும் 'கூலி' படப்பிடிப்பு...... 73 வயதிலும் அலப்பறை செய்யும் ரஜினி!

கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 6ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ