Homeசெய்திகள்சினிமாஒரு நொடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ...

ஒரு நொடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ…

-

- Advertisement -
ஒரு நொடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஒரு நொடி. இத்திரைப்படத்தில் தமன் குமார் நாயகனாக நடிக்க, வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர், பழ ராமமூர்த்தி, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தொட்டால் தொடரும், அயோத்தி ஆகிய திரைப்படங்களில் தமன் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவானது. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. படம் வசூலை பெற விட்டாலும், மக்கள் மத்தில் வரவேற்பை அள்ளியது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ஒரு நொடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் வரும் மே மாதம் 31-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஒரு நொடி படக்குழு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ