நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிடம் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்களை தவிர சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம் போன்ற பல பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதைத் தொடர்ந்து விசில் போடு எனும் முதல் பாடல் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் காண்பிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரு வீரர்கள் இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் சில நிமிடங்கள் வந்து செல்வார்கள் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு ஏற்கனவே தீவிர கிரிக்கெட் ரசிகர்.
அதிலும் சிஎஸ்கே என்றால் சொல்லவா வேண்டும். அதன்படி வெங்கட் பிரபுவும் இந்த படத்தில் சிஎஸ்கே டி-ஷர்ட் அணிந்து சில நிமிடங்கள் வந்து போவார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -