பாக்கணும்னு தோணுச்சு வந்துட்டேன்😅 விஜய் சேதுபதியை கலகலப்பாக்கிய குட்டி ரசிகர்!

விஜய் சேதுபதி தனது குட்டி ரசிகர் ஒருவருடன் செல்லமாக பேசி விளையாடும் வீடியோ இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுபவர். தனது ரசிகர்களைபார்த்ததும் ஆரத் தழுவி கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு அடுத்து என்ன என்ற பேசுவார். அந்த அளவிற்கு ரசிகர்களை மதிக்கும் பழக்கம் கொண்டவர். அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் செல்வன் ஆகியிருக்கிறார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி தனது குட்டி ரசிகர் ஒருவருடன் செல்லமாக பேசி விளையாடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா என்று கேட்ட விஜய்சேதுபதி அந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுக்க வாங்கிவிட்டு அவர் பறந்துவிட்ட்டார்.

இந்த கியூட் வீடியோவ நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் வாத்தியாராக வந்து ரசிகர்களின் பேராதவரை எந்தவித சலனமும் இல்லாமல் தட்டிச் சென்றுவிட்டார் மக்கள் செல்வன்.

Advertisement