Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் ராயன்... வெளியானது முதல் தோற்றம்...

தனுஷ் நடிக்கும் ராயன்… வெளியானது முதல் தோற்றம்…

-

- Advertisement -
தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்து படக்குழு முதல்தோற்றத்தை பகிர்ந்துள்ளது.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகன் தனுஷ். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். மொத்த திரையுலகமும் கொண்டாடும் நாயகனாக தனுஷ் உயர்ந்துள்ளார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மீண்டும் இத்திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். முன்னதாக பா.பாண்டி படத்தை இயக்கி நடித்தார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது படத்தில், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்து முதல் தோற்றத்தையும்படக்குழு வௌியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ