Homeசெய்திகள்சினிமாஹாரர் படத்தில் தர்ஷன்.... டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஹாரர் படத்தில் தர்ஷன்…. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

தர்ஷன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.ஹாரர் படத்தில் தர்ஷன்.... டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் தர்ஷன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கனா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தர்ஷன், தும்பா படத்திலும் ஹீரோவாக நடித்தார். அடுத்தது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ப்ளே ஸ்மித் ஸ்டூடியோஸ் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை ராஜவேல் எழுதி, இயக்குகிறார். இந்த படத்தில் தர்ஷன் உடன் இணைந்து காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து வினோதினி, தீனா, அர்ஷா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படமானது ஹாரர் கலந்த வேடிக்கையான பேண்டஸி பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது.ஹாரர் படத்தில் தர்ஷன்.... டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ஹவுஸ் மேட்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு எம் எஸ் சதீஷ் ஒளிப்பதிவு செய்ய ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ