தமிழ் இயக்கத்தில் தர்ஷன் மற்றும் தர்ஷனா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிப்பு பெங்களூரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
பிரபலமான மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். “வைரஸ்” “இருள்” “ஹிருதயம்” மற்றும் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஹிருதயம் படத்தின் வெற்றி தர்ஷனாவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. தர்ஷனா தமிழில் கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தர்ஷனா தற்போது தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். சினிமா பண்டி படத்தின் மூலம் அறிமுகமான பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் தனது முதல் தெலுங்குப் படத்தில் தர்ஷனா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இவரது நடிப்பில் வௌியான ஹிருதயம் திரைப்படம், மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் பெரிய ஹிட் அடித்தது. ஹிருதயம் படத்தில் தர்ஷனாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், அவர் தமிழில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் தர்ஷனாவுடன் இணைந்து பிரபல தமிழ் நடிகர் தர்ஷனும் நடிக்கிறார். இவர், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வௌியான கனா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸூக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். இந்நிலையில், தர்ஷன் இப்படத்தில் நாயகனாகவும், தர்ஷனா நாயகியாகவும் நடிக்கின்றனர். தமிழ் இந்த படத்தை இயக்குகிறார். சேத்துமான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி உள்ளன.