டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். சந்தானத்தின் நடிப்பில் ஏற்கனவே வெளியான தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களை போல் இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து டப்பிங் பணிகள் போன்ற பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 2025 மே மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 26) இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவின் மூலம் நடிகர் சந்தானம் இப்படத்தில் திரைப்பட விமர்சகராக நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு ‘KISSA47’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இப்பாடல் வரிகளை கெலுத்தி எழுதியுள்ளதாகவும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்பாடலை பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ தற்போது
ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.