Homeசெய்திகள்சினிமாரசிகரின் செல்போனை தட்டிவிட்ட தீபிகா... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட தீபிகா… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…

-

விமான நிலையத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டுச் சென்ற தீபிகா படுகோனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகும் இருவரும் பாலிவுட்டில் பிசியாக தனித்தனியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு பதான், ஜவான் திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனிடையே நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையம் வந்த தீபிகா படுகோன், அவரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரின் செல்போனை தட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்காக நெட்டிசன்கள் பலர் தீபிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர். அதேசமயம், தீபிகா விளையாட்டுக்காகக் தான் அவ்வாறு செய்ததாகவும் அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ